நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.. நான் உடல் நலத்துடன்இருக்கிறேன் ; மகிந்த


தாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் 

 உண்மைக்கு புறம்பானது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டது.


இந்த நிலையில், குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும், தாம் உடல் நலத்துடன் உள்ளதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சூரியன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்