பெற்றோல் வரும் திகதியை அறியச்சென்ற இளம்தாய் சடலமான சோகம்


பண்டுலகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு மீண்டும் எப்போது பெற்றோல் வரும் என்பதை தெரிந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் விபத்தில் சிக்கி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.


எரிபொருள் நிரப்புவதற்காக வந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இப்பெண் உயிரிழந்ததுடன் அவருடன் சென்ற தாயார் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பி.டி.அனோமா ரணசிங்க என்ற 36 வயதுடைய பெண்ணே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.


விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்