தம்மிக்க பெரேரா எம்.பி.பதவியை இராஜிநாமா செய்வார்?


-சி.எல்.சிசில்-


பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (21) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நுழைந்தார்.


பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், ஜூலை 10ஆம் திகதி இராஜினாமா செய்தார். 16 நாட்கள் குறுகிய காலமே அமைச்சராகப் பதவி வகித்தார்.


எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று தம்மிக்க பெரேராவும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்திருந்தார்.


பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவும் பாராளுமன்றத்தில் பிரவேசிப்பதற்காக வர்த்தகத்தில் வகித்த பதவிகளைத் துறந்தமை குறிப்பிடத்தக்கது.