ஒருவர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருக்க‌ முடியாது என‌ ச‌ட்ட‌ம் கொண்டுவரப்பட வேண்டும்.



நூருள் ஹுதா உமர்

ஒருவ‌ர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் ஜ‌னாதிப‌தியாக‌ இருக்க‌ முடியாது என்ப‌து போல் ஒருவ‌ர் இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் தொட‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருக்க‌ முடியாது என‌ ச‌ட்ட‌ம் கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் இருந்தால் எப்ப‌டி க‌ள‌வெடுப்ப‌து, எப்ப‌டி நாட்டை கொள்ளைய‌டிப்ப‌து, எப்ப‌டி ச‌மூக‌த்தை ஏமாற்றுவ‌து என்ப‌தை ப‌டித்துக் கொள்கின்ற‌ன‌ரே தவிர சேவையாற்றுகின்றார்கள் இல்லை.










நாடு மிக‌ மோச‌மான‌ நிலைக்கு வ‌ர‌க்கார‌ண‌ம் க‌ட‌ந்த‌ 20வ‌ருட‌மாக‌ ஒரே ஆட்க‌ள் பெரும்பாலும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளாக‌ இருப்ப‌துதான்.


ஜ‌னாதிப‌தி இர‌ண்டு த‌ட‌வைக்கு மேல் ப‌த‌வியில் இருக்க‌ முடியாது என்ப‌தை ஆர்வ‌மாக‌ செய‌ல்ப‌டுத்தும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளும் ஒருவ‌ர் இரு த‌ட‌வைக‌ளுக்கு மேல் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக இருக்க‌ முடியாது என்ற‌ ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ர‌ முயற்சிக்காமை மூல‌ம் இவ‌ர்க‌ள் சுய‌ந‌ல‌க்கார‌ர்க‌ள் என்ப‌து தெளிவாகின்ற‌து என்று தெரி வித்துள்ளார்.