மாலைத்தீவை விட்டு வெளியேறுமாறு கோட்டாவுக்கு கடும் அழுத்தம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைத்தீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாலைதீவின் தலைநகரான மாலேவை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் சென்றடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலையத்தில் இருந்து இலங்கை மக்கள் கோட்டபாயவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


இவ்வாறான நிலையில் மாலைதீவின் சுற்றுலாத்துறை சார் அதிகாரியின் அழுத்தமும் வெளியாகி உள்ளது.