ஜனாதிபதி கோட்டா இராஜினாமா!


ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.


நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.


இந்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.