எரிபொருள் விநியோகத்தில் மட்டுப்பாடு!

 


முத்துராஜவலை முனையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான டீசல் – பெற்றோல் விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


உரிய கையிருப்பு இன்மையே இதற்கான காரணம் என சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. உரிய அறிவிப்பு இன்மையால்  தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.


அதேநேரம், கொலன்னாவை முனையத்தில் இருந்தும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.