ரஞ்சன் வெளிவரும் திகதியை நீதி அமைச்சர் அறிவித்தார்!!


சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


முன்னாள் எம்.பி.யின் விடுதலை தொடர்பான அனைத்து பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


கடந்த வாரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவும் தனது தவறுக்காக மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்திட்டார்.


நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.