எ‌ரிபொரு‌ள் விலையில் மாற்றம்; பஸ் கட்டணங்களில் திருத்தம்!


இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதன்படி, சாதாரண பஸ் கட்டணம் 11.14% குறைக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை, குறைந்த பட்ச பஸ் கட்டணம் 38 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக ஆக குறைக்கப்படவுள்ளது.