கோழி இறைச்சி, முட்டையின் விலை அதிகரிப்பு தொடர்பில் விசேட கவனம் – அமைச்சர் நளின்

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தாம் அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.


கால்நடை தீவனக் கொள்வனவிற்காக கோழிப் பண்ணையாளர்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாணாடோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.