🔴18,000 பசுக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன


அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்தன.


பால் கரப்பதற்காக கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பசுக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. 


பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.


மாட்டு சானத்தை உறுஞ்சும் vacuum cleaner வகை எந்திரம் அதிக சூடாகி வெளிப்பட்ட தீப்பொறியால், பண்ணையிலிருந்த மீத்தேன் வாயு பற்றி எரிந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.