புத்தாண்டில் இனிப்பு வகைகளின் விலை அதிகரிப்பு



பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது.

அத்துடன் புத்தாண்டு அனுஷ்டானங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி, தேங்காய் எண்ணெய், பாசிப்பயறு, தேங்காய் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக இனிப்பு பண்டங்களின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்கிஸ் ஒன்றின் விலை 30 ரூபாவாகவும், ஆஸ்மி ஒன்றின் விலை 120 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

புத்தாண்டு சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் வெற்றிலை பாக்கு ஒன்றின் விலையும் 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.