இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பனிஸ்..!

 


இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் எனும் பேக்கரி உணவுப்பொருள் 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.


குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தின் போது 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


இந்த பனிஸ் 2 அடி நீளம், 1 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்டது.


குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்றினால் பெருந்தொகை பணத்திற்கு, கிம்புலா பனிஸ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது