🔴பாடசாலைகளில் இனி தொழுநோய் பரிசோதனைகள் இல்லை – சுகாதார அமைச்சு

எதிர்காலத்தில் பாடசாலைகளில் தொழுநோய் பரிசோதனைகளை நடத்துவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


பாடசாலை மாணவர்களின் மனநலம் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இந்த ஆண்டு 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.


சம்பந்தப்பட்ட தொழுநோய் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும், பாடசாலைகளுக்குள் அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொள்ளமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.


ஒரு குழந்தை அடையாளம் காணப்பட்டால், அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார், எனவே நோயாளர்களை அடையாளம் காண மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


80 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு தொற்றாத தொழுநோய் இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.


இந்த நோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் ஆறு மாதங்களுக்குள் குணப்படுத்த முடியும் என பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.