"ஒடிசா ரயில் விபத்தில் பாதிப்புற்றவர்களுக்காக பிரார்த்திக்கின்றேன்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!


இந்தியா, ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பயங்கரமான ரயில் விபத்து தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் குறிப்பி்டுள்ளதாவது,


"ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்து பற்றி கேள்வியுற்று நான் மிகவும் வருத்தமடைந்தேன். நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவுகொண்ட இந்தக் கொடூர விபத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..!"


"I am deeply saddened to hear about the tragic train accident in Odisha, India. No words to describe the horror. My thoughts and prayers are with the families who lost their loved ones and wishing a speedy recovery to those injured."