🔴ஒன்றரைக் கிலோமீட்டருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


"இங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றன. ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு. சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மதுபான சாலைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. அப்படியென்றால் பொதுமக்கள் குடிப்பதை எப்படி நிறுத்துவது?


என்னைப் போல் ஒரு துண்டு மீனையோ இறைச்சியையோ சாப்பிடாத 06 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்."  என அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.