15 பேர் கைது - ஒரு ரூபாய், தண்டம் விதிப்பு இலங்கையில் வழங்கப்பட்ட அதிசய தீர்ப்பு- பாலித ஆரியவன்சவை -


ஊவா மாகாணத்தின் கடைசி நகரமான பதுளை, வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்புச் சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல் போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதுடன், அது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதைத் தவிர, பொதுச் சந்தை இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது. சில பாடசாலை மாணவர்கள் பாக்கு மற்றும் புகையிலையை மட்டும் மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் பதுளை பஸ் நிலையத்தில் இவ்வாறு எச்சில் துப்புவதும் தெரியவந்துள்ளது.

பதுளை பஸ் நிலையத்தில் வெற்றிலை துப்புவது, சுண்ணாம்பு தடவுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, பதுளை மாநகர சபையின் சுகாதார திணைக்களம் பதுளை பொலிஸாருடன் இணைந்து வெற்றிலையை துப்புபவர்களையும் சுண்ணாம்பு தடவி வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வாரம், இதுபோன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா ஒரு டூபாய் அவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.