Headlines
Loading...
கென்யா நாட்டில் நைரோபியில் 7 மாடி கட்டிடம் சரிந்து விபத்து - 15 பேர் மாயம்

கென்யா நாட்டில் நைரோபியில் 7 மாடி கட்டிடம் சரிந்து விபத்து - 15 பேர் மாயம்



கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி. அதையொட்டியுள்ள புறநகரில் நேற்று முன்தினம் இரவு 7 மாடி கட்டிடம் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.

இதில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மீட்பு படையினர் உடனடியாக விரைந்து, மீட்பு பணிகளை தொடங்கினர். 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இருப்பினும் 15 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த கட்டிடத்தில் ஏற்கனவே விரிசல் இருந்ததாகவும், அதன் காரணமாக அதில் இருந்தவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.



கென்யா நாட்டைப் பொறுத்தமட்டில், குறைவான வருவாய் உள்ளவர்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். வீடுகளுக்கு அதிகளவில் கிராக்கி உள்ளதால், வீட்டு வசதி நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறுவது சாதாரணமான ஒன்று என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம்கூட நைரோபியில் மழை பெய்தபோது ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து 49 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. 

0 Comments: