இன்றுமுதல் இலவச சிகிச்சை, நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலையில்

  

மாலபே நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் இன்று முதல் 01-08-2017 நோயாளர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு நிர்வாக சபையொன்றை அமைக்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சுகாதார சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் யு.ஏ. அஜித் மெண்டிஸ் தலைமையில் இந்த நிர்வாக சபை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிர்வாக சபையை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், மாதாந்தம் 200 மில்லியன் ரூபா நிதியினை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கமைய இன்று முதல் நோயாளர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதேவேளை, இந்த மருத்துவமனையை அண்மையில் அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.