கிந்தோட்டை சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் செய்யும் நோக்கம் மஹிந்த அணிக்கு இல்லைஇனவாதத்தை தூண்டி அதனை அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்குஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.எம்சந்திரசேன தெரிவித்தார்.

நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,

ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சிபயன்படுத்தியது போல கிந்தொட்ட சம்பவத்தை எமக்குக் குறிப்பிடலாம்,ஆனால்நாம் அவ்வாறு செய்யப் போவதில்லை.

எமது அரசாங்க காலத்தில் சிங்கள முஸ்லிம் மோதல் இடம்பெற்றதாக   குற்றம்சாட்டினர்ஆனால்இன்றும் அது இடம்பெறுகின்றதுமஹிந்தராஜபக்ஷவுக்கு சிங்களமுஸ்லிம்தமிழ் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்திஅதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற தேவை கிடையாதுஅப்படியானநடவடிக்கைகளை நாம் அனுமதிப்பதும் இல்லை.

ஆனால்,.தே.இன்று இதனைச் செய்கின்றதுஅன்று ஐக்கிய தேசியக் கட்சிமஹிந்த ராஜபக்ஷவின் மீது குற்றம் சுமத்தியது போன்று இன்று எமக்கும்குற்றம்சுமத்த முடியும் ஆனால் அவ்வாறு செய்யவேண்டிய தேவை எதுவும்இல்லை என அவர் குறிப்பிட்டார்.