மத்தள விமான நிலையத்தில் யானைகள் நடமாட்டம்


கடந்த சில நாட்களாக மத்தள விமான நிலையத்துக்குள் யானைகள் புகுந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானநிலையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு யானைகள் உள் நுழைவதாகவும், அவற்றை துரத்தும் நடவடிக்கையில் ஹம்பாந்தோட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களினால் காட்டு யானைகளின் இருப்பிடங்களுக்கு கேள்வி குறியாகியுள்ளதாலேயே யானைகள் விமானநிலையத்தை நோக்கி படையெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.