Headlines
Loading...
ஒரு தேர்தலுமில்லை டிரெக்டாக ஜனாதிபதி தேர்தல் தானாம் - கிரியெல்ல

ஒரு தேர்தலுமில்லை டிரெக்டாக ஜனாதிபதி தேர்தல் தானாம் - கிரியெல்ல



அடுத்த ஜனவரிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் உண்டு. ஆகவே மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கான சாத்தியமுள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டியது அத்தியாவசியமாகும். எமக்­கென்று அர­சாங்­க­மொன்று அவ­சி­ய­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒருங்­கி­ணைப்பு குழுக்­கூட்டம் கண்­டியில் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், தொகுதி அமைப்­பா­ளர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கலந்து கொண்­டனர். இங்கு கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அங்கு அமைச்சர் ல­க் ஷமன் கிரி­யெல்ல மேலும் குறிப்­பி­டு­கையில்,
நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மொட்டு சின்னம் 44 சத­வீ­தத்தை பெற்­றுக்­கொண்­ட­தாக அக்­கட்­சி­யினர் கூறு­கின்­றனர். என்­றாலும் நாட­ளா­விய ரீதியில் மொட்டு சின்­னத்­திற்கு எதி­ராக 56 சத­வீத வாக்­குகள் பதி­வா­கி­யுள்­ளன. இதனை நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். ஆகவே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் விவ­கா­ரத்தில் நாம் குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை.
அத்­துடன் அடுத்த ஜன­வ­ரிக்குப் பின்னர் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அதி­காரம் உண்டு. ஆகவே மாகாண சபை தேர்­த­லுக்கு முன்னர் ஜனா­தி­பதித் தேர்தல் வரு­வ­தற்­கான சாத்­தி­ய­முள்­ளது. இதன்­படி ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கும் நாம் தயா­ராக வேண்­டி­யுள்­ளது. அதற்­காக ஏற்­பா­டு­களை கிராம மட்­டத்­தி­லி­ருந்து தற்­போதே முன்­னெ­டுக்க வேண்டும்.
அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்த வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். எமக்­கென்று அர­சாங்­க­மொன்று அவ­சி­ய­மாகும். கிராம மக்­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கமே அவ­சி­ய­மாக உள்­ளது.
கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு கிடைக்­க­பெற்ற வாக்கு வங்­கியில் 80 சத­வீ­த­மா­னவை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உரித்­தா­ன­தாகும். ஐக்­கிய தேசியக் கட்சியினருக்கு ஏதாவது செய்ய வேண்டுமாயின் எமக்கென்று அரசாங்கமொன்று அவசியமாகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அதற்காக எமது கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும் என்றார். (வி-வெ)

0 Comments: