மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை - நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு


மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் பல்வேறு நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லக்ஷபான, கெனியன், நோர்டன் பிரிஜ் மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
நிலவும் மழையுடனான காலநிலையில் இன்று  சிறிய அளவில் அதிகரிப்பை எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...