Headlines
Loading...
சுயநலத்துககாகவே எதிர்கின்றார்கள். இன ரீதியான கட்சிகளை சாடுகிறார் பைஸர் முஸ்தபா

சுயநலத்துககாகவே எதிர்கின்றார்கள். இன ரீதியான கட்சிகளை சாடுகிறார் பைஸர் முஸ்தபா




இன ரீதியிலான சிறுபான்மை கட்சிகள் தமது சுயநலன் கருதியே தேர்தல் முறைமையை எதிர்கின்றன. புதிய தேர்தல் முறைமையே  ஊழல்களற்ற ஜனநாயக முறைமையாகும். மதத் தலைவர்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் புதிய தேர்தல் முறையை ஆதரித்து அணி திரள வேண்டும்.


பழைய தேர்தல் முறைக்கு விடை கொடுக்க வேண்டும் என மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். இச்சந்திப்பில் பெப்ரல், சி.எம்.ஈ.வி. ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.


ஊழல்கள் நிறைந்த விருப்பு வாக்கு முறைமை தேர்தல் முறைமைக்கு எதிராக மதத்தலைவர்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஊழலற்ற முழுமையாக ஜனநாயக ரீதியிலான தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவோம் என்றே மக்களுக்கு நாம் உறுதிகள் வழங்கினோம்.தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தோம்.


அன்று உள்ளுராட்சி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போது பாரளுமன்ற உருப்பினர்கள் விருப்பு வாக்கு முறைமைக்கு எதிர்பு தெரிவித்தார்கள். புதிய தேர்தல் முறையை ஆதரித்தார்கள். ஆனால் இன்று தமக்கு உரித்தான பங்கு கிடைக்காமல் போகும் என்பதற்காக எதிர்கிறார்கள். நான் இலங்கையர் என்ற ரீதியிலேயே அரசியலில் ஈடுபட வேண்டும். தமது சமூகத்தை முன்னிலைபடுத்தி வாக்கு கேட்பது நியாயமானதல்ல.

நாம் இந்த யுகத்திலிருந்து துாரமாக வேண்டும் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் நான் கோரிக்கை ஒன்று விடுக்கிறேன்.விருப்பு வாக்கு முறை தேர்தலை எதிர்த்து ஒன்றிணையுங்கள். தேர்தல்கண்காணிப்பு அமைப்புகளும் இயக்கங்களும் பழைய தேர்தல்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. உங்களது எதிர்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லுங்கள் என்று வேண்டுகிறேன்.


அரசியல் கட்சிகளிடம் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். புதிய தேரதல் முறையை எதிர்பதற்கு முன்பு 10தடவைகளாவது சிந்தியுங்கள். மாகாண சபை தேர்தல் தாமதப்படுத்தப்படுவது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். பாராளமன்றத்திலுள்ள 225பிரதிநிதிகளும் மாகாண சபை தேர்தலை துரிதப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

0 Comments: