வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின்  பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெளியில் இருந்து உணவைக் கொண்டு வருவதற்கான அனுமதிக் கோரப்பட்டுள்ளது.
ஞானசாரருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொதுபல சேனா அமைப்பானது நேற்றைய தினம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

Share The News

Post A Comment: