இலங்கை கிரிக்கட் தேர்தல் நாளை

Ceylon Muslim
0 minute read
நாளை நடைபெற உள்ள இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும், ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் மற்றும் உதவி செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடையில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாம் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

இதன்போது ளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் இதனை நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.
To Top