Headlines
Loading...
10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் .

10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் .



( மினுவாங்கொடை நிருபர் )


நாட்டிலுள்ள 14 சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில் புரியும் 1,25,000 ஊழியர்களுக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர், அவர்களது மார்ச் மாத சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, சிவில் விமான சேவைகள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை உடுகம்பள இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர வர்த்தக வலய ஊழியர் நலன்புரி சங்கத்தின் குழுவுடனான சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரையிலான விடுமுறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களது மார்ச் மாதச் சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் நலன்புரிச் சங்க தூதுக்குழு அமைச்சரைச் சந்தித்து, ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்துள்ளனர். 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உடனடியாகத் தலையிட்டு சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலை நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர், அவர்களது சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 

நாட்டில் உள்ள 14 சுதந்திர வர்த்தக வலயங்களிலும் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


( ஐ. ஏ. காதிர் கான் )

0 Comments: