மீஸானின் உதவும் கரங்கள் திட்டம் அம்பாறையில் ஆரம்பம்.அபு ஹின்ஸா


கோவிட் 19 தோற்றுக்காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் நோக்கில் அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்காவினால் உருவாக்காப்பட்ட "உதவும் கரங்கள்" திட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 


பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள், தனவந்தர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 


அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என்.நூருள் ஹுதா, உப தலைவர் அப்ரிடீன் எம்.சரிபுத்தின், கணக்காளர் நாசிக் பதுர்த்தின், இணைப்பாளர் ஜௌசான் ரஹீம், உட்பட அல் மீஸான் பௌண்டசன் பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்து வருகின்றனர். 
மீஸானின் உதவும் கரங்கள் திட்டம் அம்பாறையில் ஆரம்பம். மீஸானின் உதவும் கரங்கள் திட்டம் அம்பாறையில் ஆரம்பம். Reviewed by ADMIN on May 03, 2020 Rating: 5