![]() |
| File Image |
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ இன்று செவ்வாய்க் கிழமை வட, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் முற்போக்கு முன்னணி மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் வட, கிழக்கு முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மீள்குடியேற்ற சவால்கள், காணிப்பிரச்சினைகள், தொழில்வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நெலும் பொக்குன மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காரியாலயத்தில் அனைத்து தேர்தல் தொகுதியிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் விஷேட கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஒவ்வோர் தேர்தல் தொகுதியிலிருந்தும் இரு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். (V-Velli)
