நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் காணப்படும் தனி முஸ்லிம் ஊர்களுக்குள் உள்ள சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சிகரெட், பீடி, சுறுட்டு போன்ற போதைவஸ்து பாவனைகள் விற்கப்படுகிறது.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட இந்த புகைப்பாவனை உடலுக்கும் உளத்திற்கும் கேடுதரும் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தாலும் அதனை கண்டு கொள்வதில்லை. குறிப்பாக பள்ளிவாசல்கள் இதனை தடுக்க வேண்டும் முஸ்லிம் ஊர்களுக்குள் எத்தனை பள்ளிவாசல்கள் இருக்கிறது. அதில் நிருவாகசபை உறுப்பினரை்கள் எத்தனைபேர் இருக்கின்றனர். இவர்கள் நினைத்தால் இந்த விற்பனையை தடை செய்யலாம்.
முஸ்லிம் கடையுரிமையாளர்களுக்கு பக்குவமாக சொல்வதன் மூலம் இந்த கெட்ட போதை வஸ்து பாவனையை தடை செய்ய முடியும் எப்படி முஸ்லிம் ஊர்களுக்குள் சாராய பார்கள் இல்லையோ அப்படி இந்த சிகரெட் பீடியை யும் துாரமாக்க முடியும்.
