கிழக்கு மாகாண புதிய தாதியர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு



கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியினால் 34 புதியதாதி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும்நிகழ்வு இன்று (19) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது

இதில்அம்பாறைபிராந்தியத்திற்கு 18 பேரும்,கல்முனை பிராந்தியத்திற்கு 01 வரும்மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு 05வரும்திருகோணமலை பிராந்தியத்திற்கு 10பேருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.  

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன், உதவிச்செயலாளர் உசைனுடீன், மாவட்ட பணிப்பாளர் முருகாணந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன் போது கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி வைத்தனர்.