630 பாடசாலைகளுக்கு அறிவித்தல், 106 பாடசாலைகள் மீது வழக்கு

NEWS
0 minute read


மேல் மாகாணத்தில் நுளம்பு அச்சுறுத்தல் காணப்பட்ட 630 பாடசாலைகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 106 பாடசாலைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளுக்குச் சொந்தமான 10,089 கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நுளம்பு அச்சுறுத்தல் காணப்பட்ட 630 பாடசாலைகளுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதுடன், 106 பாடசாலைகள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த வாரம் பாடசாலைக் கட்டடங்களில் டெங்கு அச்சுறுத்தல் குறித்த ஆய்வொன்று நடைபெற்றது. இந்த ஆய்வு நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
To Top