முஸ்லிம்
சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழுவினால்
மேற்கொள்ளப்பட்டு வரும் ஹஜ் ஏற்பாடுகளில் எவ்வித மோசடிகளும்
இடம்பெறவில்லை.
சில
அரசியல்வாதிகள் தமது சுய இலாபம் கருதி இவ்வாறான குற்றச் சாட்டுகளை
முன்வைக்கின்றமை சமூகவிரோத செயலாகும் என முஸ்லிம் சமய விவகார
மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
தேசிய
ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் ஊடக மாநாட்டில் ஹஜ்
விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி கருத்துத்
தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர்
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; முஸ்லிம் கலாசார
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதியம் கணக்காய்வுக்கு
உட்படுத்தப்படுவதில்லை என்பது தவறாகும். அந் நிதியம்
கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
அடுத்த
வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ள விரும்புபவர்கள் தற்போதே 10 ஆயிரம்
ரூபா வைப்பிலிட்டு பதிவு செய்யுமாறு கோரப்படவில்லை. இது பொய்யான
குற்றச்சாட்டாகும்.
இவ்வருடம்
ஹஜ் கடமையை மேற்கொள்பவர்கள் 25 ஆயிரம் ரூபா முற்பணம் செலுத்தி தமது
பயணத்தை உறுதி செய்து கொள்ளுமாறே கேட்கப்பட்டுள்ளார்கள். இம்
முற்பணம் மீளளிக்கப்படுவதாகும். பயண ஏற்பாடுகளின் போது இம்முற்
பணம் அவர்களுக்குத் திருப்பி வழங்கப்படும்.
கடந்த
வருடம் பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணம் ஹஜ் கடமையை
நிறைவேற்றாதவர்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை என்பதும்
தவறான தகவலாகும்.
அத்தோடு
முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உயர் பதவிகளில்
இருப்பவர்கள் அனைவரும் தகுதியானவர்களே. உயர் பதவிகள்
தகுதியானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
திணைக்களத்தில்
ஊழல்கள், மோசடிகள் இடம்பெறவில்லை. வீணான குற்றச்சாட்டுகள் சமூகத்தை பற்றி
தவறான கருத்துகள் பரவுவதற்கு காரணமாக அமையும் என்றார்.
