சவூதி
விமானம் மூலமாக ஜித்தாவிலிருந்து இலங்கை வழியாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா
நகருக்கு தனது கணவருடன் பயணித்துக் கொண்டிருந்த இந்தோனேசிய பெண் ஒருவர்
விமானத்தில் மரணமாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை
இடம்பெற்றுள்ளது.
மர்லியா மர்ஜான் (58 வயது) என்ற பெண்ணே மரணமடைந்த பெண்ணனாவார். இவர் மாரடைப்புக் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து இந்தோனேசியாவின்
ஜகார்த்தாவுக்கு செல்லவிருந்த நிலையில் பயணி இறந்ததை அடுத்து சடலம்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில்
வைக்கப்பட்டது.
சடலத்தை இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
