கெகிராவ பிரதேச சபை உப தலைவராக ஹிலால்தீன் தெரிவு


இப்னு அஸாத்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கெகிராவ பிரதேச சபை உந்துருவெவ தேர்தல் வாட்டாரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பாக முதன்மை வேட்பாளராக களமிறங்கிய பண்டாரபோத்தானையை சேர்ந்த  எம்.எல்.எம். ஹிலால்தீன்  வெற்றி பெற்றார்.
இன்று இடம்பெற்ற (11.04.2018) கெகிராவ பிரதேசபை கன்னி அமர்வுகளில்  இவர் உபதலைவராக ஏகமனதாக  தெரிவு செய்யப்பட்டார். இவர் வரட்சியான காலங்களில் கெகிராவ பிரதேச மக்களுக்கு இன மத பேதமின்றி பல உதவிகளை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்