மட்டக்களப்பு - கொக்கட்சிச்சோலையில் இன்று (14) நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டூரைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிக்கந்தையில் உள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்களில் சென்றுக்கொண்டிருக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை விபத்துக்குள்ளான மோட்டார் சைக்களில் மற்றொருவரும் பயணித்ததாகவும், விபத்துக்குப் பின்னர் அவர் காணாமல் போயியுள்ளதாகவும் அவர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்