இலங்கையில் கொரோனா மரணம் அதிகரிப்பு - 90 ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள்


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளது.


பூவெலிகடை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 239 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்