நெசவுத் தெருவைச் சேர்ந்த 9 வயது
முஸ்ரப் எனும் சிறுவன் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, சுப்ஹு மற்றும்
எல்லாத் தொழுகைகளையும்,ஒரு வகத்
கூட தவற விடாமல் ஜமாஅத்தோடு
முன் ஸப்fபில் நின்று தொழுது வந்ததையும்,பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு வந்து சுன்னத் முதற்கொண்டு அவன் தொழுது வந்ததையும் நாம் அறிகிறோம்.
அந்த சிறுவன் சுப்ஹுத் தொழ பள்ளிக்கு வரும்போது, அவனது தாயார் தெருவில் நின்று பிள்ளை பள்ளிக்குச் செல்வதை நின்று கவனிப்பதோடு மாத்திரமல்ல, அவன் தொழுது விட்டு வரும் வரையிலும் அங்கேயே
நின்று அழைத்துச் செல்வார்களாம். அருமையாக பிள்ளையை நல்லபடி வளர்த்திருக்கிறார்கள்.
சில சமயம் நமக்கே தூக்கத்தின் காரணத்தால் அஸர் ஜமாஅத் தவறி விடும் நிலையில், அந்த சிறுவனோ ஒருநாள் கூட சுப்ஹு அஸர் தொழுகையை தவற விடாமல் வருவதைக் கண்டு நமக்கே சற்று வெட்க உணர்வு வரத்தான் செய்கிறது. 5-30 மணிக்கு சுப்ஹு ஜமாத்துக்கு நம்மில் எத்தனை பேர் வருகிறோம் என்பதை நாம் எண்ணிப்பார்க்கனும்.
ஆறாம் பள்ளி முக்கியஸ்தர்களும் ஜமாஅத்தார்களும், மற்றவர்களூம், அந்த சிறுவனை கவனித்தே வந்தனர். அதிலும் சமூக ஆர்வலரும் இது போன்ற பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதில் ஆர்வம் மிக்கவருமான அருமைச்சகோதரர் மாஸா அல்லாஹ் தாவூது அவர்கள்,அந்த சிறுவனை கௌரவிக்கும் முகமாக,பரிசில்கள் வழங்கி அவனை கௌரவித்தார்கள்.ஆனால் அந்த சிறுவனோ நான் அல்லாஹ்வை தொழ வந்தேன் எனக்கு இந்த பரிசுகள் வேண்டாம் என்று வாங்க மறுத்தான்.
இந்த பரிசு உனக்கில்லை,உன்னைப்போல பல பிள்ளைகளும் ஜமாஅத்தை பேண வர வேண்டும் என்று ஆர்வமூட்டத்தான் இந்த பரிசு வாங்கிக் கொள் என்று சொல்லி பரிசுகள் வழங்கப் பட்டது.ஜமாஅத்தை சேர்ந்த பலரும் ரொக்கப் பரிசுகளும் வழங்கி் அவனை கௌரவித்தார்கள்.
வல்ல ரஹ்மான்அந்த சிறுவனை சிறப்பாக்கி வைப்பானாக. மார்க்கத்தைப் பேணி நடக்கக் கூடிய பிள்ளையாக ஆக்குவானாக.அவனது பெற்றோருக்கும் வளமான நலமான வாழ்வை கொடுப்பானாக. இப்படிப்பட்ட மக்களை ஊக்குவிக்கும் நல்லோருக்கும் எல்லா
நலமும் வளமும் வழங்கிடுவானாக.
புனித ரமழானின் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெற்றவர்கள் அணியில் நம் அனைவரையும் இணைப்பானாக.
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்.!!!
ஏ.ஆா்.தாஹா.
வல்ல ரஹ்மான்அந்த சிறுவனை சிறப்பாக்கி வைப்பானாக. மார்க்கத்தைப் பேணி நடக்கக் கூடிய பிள்ளையாக ஆக்குவானாக.அவனது பெற்றோருக்கும் வளமான நலமான வாழ்வை கொடுப்பானாக. இப்படிப்பட்ட மக்களை ஊக்குவிக்கும் நல்லோருக்கும் எல்லா
நலமும் வளமும் வழங்கிடுவானாக.
புனித ரமழானின் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெற்றவர்கள் அணியில் நம் அனைவரையும் இணைப்பானாக.
ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்.!!!
ஏ.ஆா்.தாஹா.

0 கருத்துகள்