கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.G.Sugunan அவர்களின் பணிப்புரைகளுக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr.Faroosa Nakfar அவர்களின் தலைமையில் நிந்தவூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் SKS ஆகியோர் இணைந்து களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அரசாங்கம் மற்றும் சுகாதார திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட சட்ட வரையறை, பொதுச்சுகாதார விதிமுறைகளை மீறி நிந்தவூர் பிரதேசத்தின் உள்ளாத்துக்கட்டுப்பகுதியில் ஒன்று கூடலில் ஈடுபட்ட இளைஞர்கள் மடக்கிபிடிக்கப்பட்டனர்.
பிடிக்கப்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டதுடன் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
தகவல் Dr.பறூசா நக்பர்
சுகாதார வைத்திய அதிகாரி
நிந்தவூர்¹@1
0 கருத்துகள்