சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் பரிசோதனையில் பெறுபேறுகள் அனைத்தும் நெகடிவ்..


இன்று (16) சாய்ந்தமருதில் ஒரு தொற்றாளர் அடையாளங் காணப்பட்டதுடன் அவருடன் தொடர்பு வைத்தவர்கள் மற்றும் அவருடன் அண்டிய வீட்டார்கள் எல்லோருக்கும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் சேரின் வேண்டுகோளுக்கிணங்க எமது அலுவலகத்தின் சுகாதார வைத்தியர் அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் சேர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார் அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று சாய்ந்தமருதில் அண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அனைவருக்கும் நெகடிவ் பெறுபேறுகளும் கிடைக்கப்பெற்றது.

இதன்போது உரிய தொற்றாளர் சிகிச்சை பெறுவதற்கு சிகிச்சை  நிலையத்திற்கு அனுப்பப்பட்டதுடன் அவரது குடும்பமும் சுய தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டனர்.


இந் நிகழ்வில் எமது அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களும் உத்தியோகத்தர்களும் மற்றும் கொவிட்-19 செயலணி தொண்டர் குழுவும் கலந்து கொண்டது...

கருத்துரையிடுக

0 கருத்துகள்