நேற்று மாத்திரம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு ஸ்டிக்கர் வழங்கள்



அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் வழங்கும் நடவடிக்கை இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய நாளில் மாத்திரம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட போதிலும், வாகன பரிசோதனைகள் எழுமாறாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைக்காக கொழும்புக்கு வருகை தருபவர்கள் தமது கடமைக்கு உரிய நேரத்தில் சமூகமளிப்பதை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொழும்புக்குள் உட்பிரவேசிக்கும் 52 இடங்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்