அவுஸ்திரேலியாவின், மெல்பர்ன் நகரில் கடந்த தினம் அடையாளம் காணப்பட்ட டெல்டா கொவிட் திரிபு இலங்கையில் இருந்து சென்றவர் ஊடாக பரவியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும், குறித்த விமானப் பயணி இலங்கை ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் இலங்கைக்குள் எந்த சந்தர்ப்பத்திலும் பிரவேசிக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக குறித்த நபர் இலங்கை சமூக தொற்றாளர் இல்லை என இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்திருந்தார்.

0 கருத்துகள்