யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் அடிப்படையில், வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் வவுனியா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதாக, வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடாக வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியற் கற்கைகள் ஆகிய பிரிவுகளில் உயர்கல்வி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்