கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியினரால் இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப் எப் .எம் .ஏ. காதர் அவர்கள் தெரிவித்தார்கள்.
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 யை கடந்து 03 மரணங்களும் பதிவாகியுள்ளமையினால் கொரோனா தொற்றாளர்களை இனங்கான இன்று இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விளையாட்டுகள் ,குடும்ப சாப்பாட்டு நிகழ்வுகள், திருமண ஒன்று கூடல்கள், பொதுக்கூட்டங்கள், போன்ற கூட்டு நிகழ்வுகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியவை.
_வெளியில் செல்லும் மக்கள் சுகாதார விதி முறைகளை பேணி முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்படுள்ளது_.
எனவே தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து பொறுப்புடன் நடந்து இந்த அபாயகரமான கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
சுகாதார வைத்திய அதிகாரி அக்கரைப்பற்று

0 கருத்துகள்