நாரஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு – மேலும் ஒருவர் கைது



நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலையடுத்து 22 வயதான சந்தேகநபர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கடந்த 14ம் திகதி இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்