உரக் கொள்வனவில் ஜனாதிபதி செயலாளர் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி : அருண பத்திரிகை மீது தொடரும் விசாரணை

ADMIN
0


இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக தெரிவிக்கப்பட்டு ‘அருண’ ஞாயிறு வாரவெளீட்டில் வெளியான செய்தியானது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இந்த செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளர் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default