இலங்கையில் முதற்தடவையாக சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம்!

ADMIN
0

 

நாட்டில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மற்றும் பாதுகாப்பற்ற அனைத்து சிறுவர்களின் தரவுகளையும் உள்ளடக்கிய தேசிய தரவுத்தளம் ஒன்று முதற் தடவையாக நிறுவப்பட்டுள்ளது.


இதன்படி ,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இந்த தரவுத்தளம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய ,காவல்துறை, கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேரடியாக இந்த தரவுத்தளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதேவேளை, சிறுவர்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 24 மணிநேரமும் இயங்கும் 1929 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default