11 கட்சிகளின் இறுதித் தீர்மானம்..! ஜனாதிபதிக்கு அறிவிப்பு


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சுயேச்சைக் கட்சிகளும் நிபந்தனைகளுடன் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்க இன்று (28) தீர்மானித்துள்ளன.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


ஜனாதிபதியால் நாளை தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துக் கொள்வது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 


எவ்வாறாயினும், பிரதமரோ அல்லது அமைச்சரவையோ இன்றி தனிப்பட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவது என 11 கட்சிகளும் இன்று தீர்மானித்துள்ளன.

Tags