உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் உட்பட, கர்தினால் தலைமையில் 60 பேர் வத்திக்கான் பயணம்.


பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

 தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.


இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோவும் அடங்குகிறார்.


அத்துடன், உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன