“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” - சாணக்கியனின் அதிரடி கேள்வி.
எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த சகோதருக்கும் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார்.

இடையே குறுக்கிட்ட பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “அவ்வாறான செயற்பாட்டை செய்தமையால்தான், 300 பேரை காப்பாற்றினோம்” என்றார்.

குறுக்கிட்ட சாணக்கியன் எம்.பி., ஒருவரை “கொன்றமையால்தான் 300 பேரை காப்பாற்றினோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர் என்கையில், இடைமறித்த பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

ஒருவரை கொன்றமையால்தான் 300 பேரை காப்பாற்றினோம்” என்று நான் கூறவில்லை என்றார்.

தனதுரையை தொடர்ந்த சாணக்கிய எம்.பி., “ என்னை விடவும் இங்கிருப்பவர்களுக்கு நன்றாக சிங்களம் தெரியும். “ஒருவரை கொன்றமையால்தான் 300 பேரை காப்பாற்றியதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் எனக் கூறிய சாணக்கியன் எம்.பி, மக்கள் தீர்மானிப்பார்கள் என தனதுரையை நிறைவு செய்தார்.